Thursday 6 September, 2012

ஆண் என்ன? பெண் என்ன?

ஆண் என்ன? பெண் என்ன? 

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான், என் அக்கா, என நான்கு பேர் மாத வித்தியாசத்தில் கர்ப்பமாக இருந்தோம். குழந்தை பிறக்கவிருக்கும் சந்தோஷத்திலும், அது நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்ற அச்சமே எனக்கு இருந்தது. ஆனால் வீட்டு பெரியவர்கள் பூமுடிப்பு சீமந்தம் என எதில் வாழ்த்துவதானாலும் சரி, குழந்தையை பற்றி எது பேசுவதானாலும் சரி, "பையனா பெத்துக்கோ", "என்ன பையன் எட்டி உதைக்கறானா? ", " பையன் என்ன சொல்றான்?" என்றே கருவில் இருக்கும் சிசுவை பையன் என பாவித்தே பேசுவார்கள். வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல தெருவில் இறங்கினால், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருமே பையன் புராணம் தான். என் குடும்பம் மட்டும் இல்லை, தோழிகளின் குடும்ப வட்டாரங்களிலும் கர்பமான பெண்களுக்கு இதே நிலை தான்.

ஏன் கர்பமாக இருக்கும் ஒரு பெண், பெண் குழந்தை பெற்றுக் கொள்ள  கூடாத?  பெண் குழந்தை என்றால் இளக்காரமா? இல்லை சாபமா? 

ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லாத இந்த நவீன உலகில், ஒரு பெண்ணை அவள் பிரசவ காலத்தை அனுபவிக்க விடுங்கள், நல்ல முறையில் ஆரோக்கியமான ஒரு குழந்தையை பெற்று தாயும், சேயும்  நலமாய் வர வாழ்த்துங்கள். என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை. பேசும் கருத்தம்மாக்களே தயவு செய்து திருந்துங்கள்.  

No comments:

Post a Comment