Wednesday 5 September, 2012

Hazards of using Paper cup


உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பேப்பர் கப்

இன்று  மக்கள் தொகை போல் நாளுக்கு நாள் பேப்பர் கப் உபயோகம் பெருகி வருகிறது. அலுவலக கேன்டீன்கள் முதல் கொண்டு சிற்றுண்டி சாலைகள், வீட்டு விசேஷங்கள் என விருந்தும் உணவு உபசரிப்பும் இருக்கும் இடங்களில் எல்லாம் பேப்பர் கப்கள் கட்டாயம் இருக்கும். ஆனால் இதில் காப்பியோ டீயோ குடிபவர்களுக்கு, அதில் இருக்கும் ஆபத்து தெரிவதில்லை.

"சமீபத்தில் நண்பர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றார். பல பரிசோதனைக்கு பிறகு அவரின் வயிற்றில் மெழுகு இருப்பதும் அதுவே வயிற்று வலிக்கு காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அலுவலக   கேன்டீன்களில் பேப்பர் கப்பில் அடிக்கடி டி காபி குடிப்பது அவரில் வழக்கம், அந்த கப்களில் இருந்த மெழுகு தான் நண்பரின்  வயிற்று வலிக்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது.அதனால் தயவு செய்து யாரும் பேப்பர் கப் உபயோகப்படுத்தாதிர்."
இப்படி ஒரு செய்தி சமீபத்தில் சமூக வலையதளங்களிலும், சில பத்திரிகைகளிலும்  இடம் பெற்று இருந்தது. படித்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி, குறிப்பாக பேப்பர் கப்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு.

பேப்பர் கப் மட்டும் இல்லை, பேப்பரால் ஆன தட்டுகள், டம்பளர்கள், பாத்திரங்கள் மற்றும் ஹேட்டல்களில் சாம்பார், ரசம் போன்றவை பேக் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் என அனைத்துமே தொடர்ந்து பயன்படுத்தினால் நாளடைவில் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். சூடான டீ காபி ஊற்றும் போது கப் நைந்து விட கூடாது என்பதற்காக கப்களின் உட்புறத்திலும், வெளிபுறத்திலும் ஒரு வித மெழுகு பூசப்படுகிறது. சூடான டீ காபி அதில் நிரப்பப்படும் போது வெப்பம் காரணமாக பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகு கொஞ்சம் உருகி டீ-காபியுடன் கலந்து வயிற்றுக்கு சென்றுவிடுகிறது. இது நாளடைவில் பல உபாதைகளைதஂ தோற்றுவிக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும்   16 பில்லியன் பேப்பர் கப்கள் தயாரிக்கபஂபடுகிறது  இது கிட்டத்தட்ட  6.5 மில்லியன் மரங்களுக்கு சமமாகும்.இது போல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பல பில்லியன் கப்கள் உபயோகப்படுதபஂபடுகிறது.இதில் டீ காபி அருந்தும் மக்கள் வயிற்று உபாதை மட்டும் அல்லாமல் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

காப்பே கப் நைந்து போகாமல் இருக்க மரபிசின் பூசப்படவேண்டும் ஆனால் இன்றோ பெட்ரோ- கெமிக்கல் பூசுகிறார்கள். இதனால் சூடாக மட்டும் அல்லாமல், குளிர்ச்சியான பொருட்கள் நிரப்பப்பட்டலும், அல்லது  உணவுகள் வைத்து சாப்பிட நேரும்போது ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரை வர வாய்ப்பு உள்ளது.

அது மட்டும் அல்லாமல் பேப்பர் கப்கள் இருட்டான அல்லது ஈரத்தன்மை உள்ள குடோன்களில்  சேர்த்து வைக்கும் போது கண்ணுக்கு தெரியாத பூஞஂசை உருவாகி ஆஸ்துமா, நினைவு  இழப்பு போன்ற நோய்களும் வர வாய்ப்பு உள்ளது.

இதில் ஒரு சில மறுசுழற்ச்சி  முறையில்  செய்யப்பட்ட பேப்பர்  கப்கள் உபயோகப்படுத்தும் போது அதில் உள்ள பிச்பநோல்  என்ற பிசின் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை வியாதி, ஈரல் பிரச்சனைகள், வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்பு இருக்கிறது.

உடல் பிரச்சனை மட்டும்  இல்லாமல் இயற்கை அழிவிற்கும் இவை காரணமாகின்றன. மெழுகும் பிளாஸ்டிக்கும் சேர்க்கப்பட்டதால் குறைந்த அளவு பேப்பர் கப்களே  மறுசுழற்ச்சி செய்யப்படுகின்றன. கூடவே கப்களில் பெட்ரோ கெமிக்கல் பூசப்படுவதால் மக்குவதர்க்கும் நேரம் எடுக்கும்.

இவ்வளவு பிரச்சனைகளையும் கொண்டு பேப்பர் கப்களை உபயோகப்படுதுவதற்க்கு பதில் கண்ணாடி குவளைகள், சில்வர் டம்ளர்கள்  பயன்படுத்துவது உடலுக்கும் சிறந்தது. அது மட்டும் அல்லாமல் இயற்கை பேரழிவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

இனி நீங்களும் பேப்பர் கப்களுக்கு நோ சொல்பவர் தானே??


No comments:

Post a Comment