Tuesday 11 September, 2012

High heels slippers affects fertility in women


குழந்தை பாக்கியத்தை குலைக்கும் ஹை ஹீல்ஸ் 

நம்ம மெட்டு தெரு சாருவுக்கு கல்யாணம் ஆகி 13 வருஷமா குழந்தை இல்லை, அதுக்காக அவ சாப்பிடாத மருந்து இல்லை, போகாத கோயில் இல்லை, இருந்தும் ஒன்னும் அவளுக்கு பயன் தரல. வாழ்கையே வெறுத்து போய் இருந்தா. நம்ம மக்கள் நல்லா வாழ்ந்தாலே விட்டு வைக்க மாட்டாங்க, சாருவை சும்மா விடுவாங்களா? ஊரோட குத்தல் பேச்சுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளானா. எல்லாரும் அவளை நல்ல விசேஷங்களுக்கு ஒதுக்கிறது அவளுக்கு புரிஞ்சுது. அழுகையே வாழ்க்கையா போச்சு. அப்பொழுது  தான் அவளோட தோழி அவளை ஒரு டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போனா.

டாக்டர் சாரு கிட்ட சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சி தந்தது. அவள் விரும்பி போடுற ஹை ஹீல்ஸ் ஸ்லிப்பர் தான் அவளுக்கு குழந்தை பிறக்காம இருக்கிறதுக்கு முக்கிய காரணமாம். அவள் அழகை கூடிக்க அவள்  செய்த விஷயமே வினையா முடிஞ்சதை நினைச்சி அவளுக்கு செத்து போகணும் போல இருந்தது.

சாரு மட்டும் இல்லை, நாட்டுல பல சாருக்கள் ப்படி இருக்காங்க, பருவ வயசுல ஆரம்பிச்சி, தன்னோட அழகை மேன்படுத்தவும், தக்கவசிக்கவும், பல விஷயங்கள செய்யறாங்க, அப்படி ஒன்னு தான் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதும். பேஷன் வைரஸ் கிருமி போல பரவி ஏன் எதுக்குன்னு தெரியாம பல பெண்களும் போட்டில இறங்கிடறாங்க. 

ஹை ஹீல்ஸ் மோகம் பெண்களை ஆட்டி படைக்க ஆரம்பிச்சதுமே டாக்டர்கள் பல எச்சரிக்கைகள் கொடுக்க ஆரம்பிச்சாங்க, அதிகமா ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்தால், முதுகு தண்டுல பிரச்சனை வரும், மற்றும் மூட்டு, குதிகால் வலி வரும் என்று, பின்பு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் கண்டிப்பாக ஹை ஹீல்ஸ் அணியக்கூடாதுன்னு, ஆனால் ஆசையும் மோகமும் யாரை விட்டது. தினமும், இருபது நான்கு மணி நேரமும் அழகாகவே இருக்கணும்னு ஹை ஹீல்ஸ் செருப்பையும் கழுட்டாமலயே இருந்துட்டாங்க நம்ம ஊரு பெண்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே, அப்போ நஞ்சு?? விளைவு சமமான பாதம் இல்லாமல் இயற்கையான உடல் அமைப்பு கெட ஆரம்பிச்சுது. ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பொழுது, இடுப்பு எலும்புக்கு நிறையை அழுத்தம் கொடுத்து, கர்பபை தன் இடத்தை விட்டு இறங்கிடுத்து, அதனால் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைகிறது. 

இந்த செய்தி பெண்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி அடிக்குது. இனியாவது,  பெண்கள் ஆபத்து இல்லாத இயற்கையான அழகை தேர்ந்தெடுக்கணும், இன்னும் பல சாருக்கள் உருவாகாமல் இருக்கணும்.     
       


No comments:

Post a Comment