Tuesday 11 September, 2012

வடைகறி செய்வது எப்படி?


வடைகறி செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு -  ½ ஆழக்கு

இஞ்சி பூண்டு விழுது -  1 டீஸ்பூன்  

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு 

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை 

மிளகாய் தூள் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

 தாளிக்க -  உளுத்தம் பருப்பு, சோம்பு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,  

அலங்கரிக்க -  கறுவேப்பில்லை  கொத்துமல்லி 



செய்முறை:

கடலைபருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மழ மழவென  அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்ததை எண்ணெயில் சிறு உருண்டைகளாக பொரித்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து, பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மூன்று முதல் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும், நன்கு கொதித்து வாசனை வந்த பிறகு பொரித்த உருண்டைகளை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு கறுவேப்பிலை, கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.



சுவையான வடைகறி தயார், இதனை இட்லி, தோசை அல்லது பூரியுடன் பரிமாறலாம்.

   







No comments:

Post a Comment