Saturday 22 September, 2012

ரணம் சுகம்



என் தோழி கையில் இருந்த ஒரு புத்தகத்தின் அட்டை படம் பார்த்து, அந்த புத்தகத்தை அவளிடம் இருந்து வாங்கி படித்தேன், ரணம் சுகம் புக்கிசை என்று எழுதி இருந்தது. "காலேஜ் பசங்க எழுதின நாவல் போல, படிச்சதும் திரும்பவும் காலேஜ் போயிட்டு வந்தது போல இருந்துது, வேனும்ன நீயும் படிச்சிட்டு தா" ஏன்றால், "குழந்தையை வச்சிக்கிட்டு நாவல் எல்லாம் எப்படி டி படிக்கிறது,படிக்கிற இண்டேறேச்ட் வந்துடுச்சினா  புக்கை கிழ வைக்கவும் மனசு இருக்காது, அவளையும் பார்த்துக்க முடியாது" என்றேன் "இந்த புக் படிக்க 2  மணி நேரம் போதும் புது முயற்சியா இருக்கு இந்தா"  என்றாள். ரணம் சுகம் என்ற பெயர் என்னை ஈர்த்தது. புக்கிசை அப்படி என்றால்?? நாவலோடு சேர்த்து ஒரு பாட்டு சீ டி இருந்தது, படிக்க ஆரம்பித்தேன், அவள் சொன்னது போல் படிக்க படிக்க என் காலேஜ் வாழ்க்கையை நினைவு படுத்தியது.

நான்கு நண்பர்கள் அவர்கள் கூட பெண் பாடகி என, அவர்கள் ஒரு இசை குழு வச்சிருக்காங்க, இசை மேல் பிரியம் உள்ள ஒரு குழு என்று கூட சொல்லலாம். கதையின் நாயகன் நரேன் இளையராஜா ரசிகன், அவன் உயிர் நண்பன் சிவா ரஹ்மான் ரசிகன், எவர் இசை பெரியது என்று இவர்களுக்குள் வாக்குவாதமும் வரும். ஃரெஷரஂஸஂ டேக்காக அவர்கள் குழு இசை அமைத்து பாடிக்கொண்டு இருக்கும் பொழுது நரேன் கூட்டத்தில் ஒரு பெண்ணை பார்க்கிறான் பார்த்ததும் காதல் வசப்படுகிறான், அவள் பெயர் ரம்யா. அதிர்ஷ்டமோ துரடிர்ஷ்டமோ அவள் இவர்களின் இசை குழுவில் புதிய பாடகியாக சேர்கிறாள். ரம்யாவும் நரேனும் ஒரே பகுதியில் வசிப்பதால் இருவருக்கும் ரயில் சிநேகிதமும் வளர்கிறது. இடையில் . ஆர்.ரஹ்மான் இசை போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது. ரஹ்மானின் தீவிர ரசிகனான சிவாவிற்கு இதில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி வருகிறது. ஆதலால் தன் இசை குழுவை   அதற்காக அவன் தயார் செய்கிறான். இதற்கு இடையில் நரேனுக்கும் ரம்யாவிற்கும் நட்பிற்கும் காதலுக்கும் இடையிலான ஒரு உறவு வளர்கிறது,

ஒரு நாள் நரேன் வீட்டில் இவர்கள் இசை அமைத்து பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். யாரும் இல்லா சமயத்தில் நரேன் ரம்யாவை முத்தமிடுகிறான், அதற்கு  அவள் ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சில நாட்கள் நரேனுடன் இயல்பாய் இருந்து விட்டு அவனை விட்டு விலக ஆரம்பிக்கிறாள். காரணம் புரியாமல் நரேன் தவிக்கிறான். கடைசியில் நரேனும் ரம்யாவும் சேர்கிறார்களா இல்லை பிரிகிறார்களா என்பதே ரணம் சுகம்

மொத்தம் 10   பகுதிகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாடல். புத்தகத்தை படித்துகொண்டே ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் பாட்டை கேட்பது வித்தியாசமான ஒரு அனுபவமாக உள்ளது.  கதை நரேன் மூலமாக சொல்லப்படுகிறது, அவன் ஒவ்வொருவரையும் பற்றி விவரிப்பது நன்றாய் உள்ளது. இளையராஜா .ஆர். ரஹ்மான் மற்றும் அவர்களின் பாடல்கள் என கதை முழுக்க வருகிறது. இசை, காதல் மற்றும் இசையின் காதல் என வருவதால் தமிழ் இசை பிரியர்களுக்கு நல்ல விருந்து. காதல் கதை பிடிக்காதவர்கள் உண்டோ?? 

நரேன் சிவாவை "ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஒரு நல்ல ஹிட்லர்", ரம்யாவை பற்றி கனவு கண்டு விட்டு " சில கனவுகள் தொடர வாழ்க்கை முழுக்க தூங்கலாம் " என்று சொல்வது, மற்றும் "பிடித்த பெண் என்றால் பாதுகாக்கும் எண்ணம் சொல்லிக்கொடுக்காமலே வருகிறது" போன்ற வாசனைகள் நம்மை ஈர்க்கிறது. ஒன்பதாவது பகுதியில் கதை ஏதும் சொல்லாமல் வெற்றுகாகிதம் என் வாழ்க்கை என்ற தலைப்பில்  ஒரு வெள்ளை காகிதம் வைத்திருப்பது மௌனத்தின் மொழியாய் இருந்தது.

காதல் அதிலும் கல்லூரி கதை, நான்கு நண்பர்கள் என பழக்கப்பட்ட வரிசை. கதை படிக்கும் பொழுது கௌதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா கதை போல் இருப்பதை உணரலாம். மற்ற படி  கடைசி பக்கங்களில் புத்தகங்களை வைத்து கதை சொல்லி இருப்பதும், பாடல்களை வைத்து கதையை கொண்டு சென்று இருப்பதும் வித்தியாசமான புது முயற்சி என்றே சொல்லலாம்.

நரேன் சொல்லுவது போல் "சிறு பிள்ளையாகவே இருந்து இருக்கலாம், அம்மா என்னை பாதுகாத்திருபாள். தேவை இல்லாமல் வளர்ந்துவிட்டேன்" என்று சொல்லுவது எதார்த்தத்தின் வலி. 

கடைசி பக்கத்தில் " ரணங்கள் முடிவதில்லை, வலிகள் தீர்வதுமில்லை 'நானும் நானும்'னு சொல்லிகொண்டே உலகத்தோடு ஓடணும், என்றாவது நின்னு திரும்பி பார்க்கையில் புரியக்கூடும்,

'வலி வரம்'
'ரணம் சுகம்'

உண்மை தான் படித்ததும் உங்கள் கல்லூரி காலங்கள், ரணத்தின் வலிகளை உணர்ந்து நீங்களும் சொல்வீர்கள் "ரணம் சுகம் தான்" என்று.